புதிய இந்தியா, புதிய இந்தியா என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் இது விநோத இந்தியாவாக இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் டேய் என்னடா நடக்குது இங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஒரு படத்தில் "இருக்கு ஆனா இல்லை".. என்று வசனம் பேசுவார் எஸ்.ஜே சூர்யா. கிட்டத்தட்ட தமிழகத்தில் நடந்து வரும் பல கூத்துக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
தமிழகத்தில் எதுவுமே சீரியஸ் கிடையாது இப்போது. எல்லாவற்றையும் காமெடியாக்க விடுகிறார்கள். தார்மீக நெறி என்று சொல்வார்களே அதெல்லாம் கிலோ எத்தினி என்று கேட்கும் நிலைதான் உள்ளது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பெரிய தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக தண்டனை கிடையாது.. என்ன டேஷ் வேண்டுமானாலும் பேசலாம்.. செய்த சேட்டைக்கு உரிய கூலி மட்டும் கொடுத்துட்டா போதும்.. அப்டியே போய்க்கொண்டே இருக்கலாம்..
You can do whatever you want, You can commit whatever crime you want, everything has a price in Tamil Nadu nowadays. A piece on this.