¡Sorpréndeme!

கோழியை கவ்விச் சென்ற சிறுத்தை! வைரலாகும் சிசிடிவி காட்சி!

2025-05-21 7 Dailymotion

தருமபுரி: பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று கோழியை கவ்விச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த கிராமப் பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

அவ்வாறு வரும் விலங்குகள் இப்பகுதியில் உள்ள கோழி, ஆடு போன்ற கால்நடைகளை தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதிலும் குறிப்பாக, வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியே சிறுத்தை ஒன்று வந்து, வீட்டு அருகே இருந்த கோழியை லாவகமாக கவ்விச் சென்றது. இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.