¡Sorpréndeme!

பலூசிஸ்தான் சுதந்திரம் அறிவிப்பு; பாகிஸ்தானில் பதற்றம் அதிகரிப்பு !

2025-05-15 7 Dailymotion

பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றதாக மிர் யார் பலோச் உள்ளிட்ட பலூசிஸ்தான் தலைவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, 'பலூசிஸ்தான் குடியரசு' சமூக ஊடகங்களில் டிரெண்டாகி இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரை என்ற பெயரில் நடந்த சமீபத்திய எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டம் நிலவும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பலூச் கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளரும் பிரபல எழுத்தாளருமான மிர் யார் பலோச், எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார் .