நீலகிரி மாவட்டத்திற்கு 5 நாள் பயணமாக வத்ததுள்ள தமிழ்ழாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலனின் முதுமலை தெப்பகாட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். யானைகள் முகாம் நுழைவாயிலில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் அவரை வரவேற்றனர்.பின்னர் பழங்குடியினரின் நடனத்தை கண்டு ரசித்தார்.முதலாவதாக பல்வேறு மாவட்ட வனத்துறைக்கு 30 பொலிரோ மற்றும் அனைத்து வகையான சாலைகளில் செல்லகூடிய 2 வாகனங்களையும் வழங்கினார். 5 கோடியே 6 லட்சம் மதிப்பில் கட்டட்டுள்ள 44 வீடுகள் கொண்ட மாவுத் கிராமத்தை திறந்து வைத்து வளர்ப்பு யானைகளுக்கு கரும்பினை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.