¡Sorpréndeme!

மரத்தில் அமர்ந்து 'கம்பீரமாக' பார்க்கும் சிறுத்தை... வீடியோ வைரல்!

2025-04-30 3 Dailymotion

நீலகிரி: முதுமலை வனப் பகுதியில் உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் சிறுத்தையின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை, வனத்துறையினர் தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து காட்டுப் பகுதிக்குள் வாகனம் மூலமாக அழைத்துச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற போது, மரத்தின் கிளையில் அமர்ந்து சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

சிறுத்தை அமர்ந்திருந்த அழகும், கம்பீரமான தோற்றமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஒரு அற்புதமான காட்சியைக் காணுவது இதுவே முதல்முறை என அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். அந்த காட்சியைக் கண்டு பிரமிப்படைந்த சுற்றுலாப் பயணிகள், தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர். அதில் சிலர், சிறுத்தையின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.