¡Sorpréndeme!

ஒரே இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் பயணம் - அதிர்ச்சி தரும் வீடியோ!

2025-04-22 9 Dailymotion

சேலம்: ஆத்தூர் அருகே ஒரு இரு சக்கர வாகனத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஏழு பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, இறுதி ஆண்டுத் தேர்வு முடிந்த நிலையில், தற்போது 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்ப மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பள்ளி சீருடையில் இருக்கும் ஏழு மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பெத்தநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.