¡Sorpréndeme!

ஸ்ரீ-யின் நிலைமை என்ன? உதவிக்கு வந்த லோகேஷ்! வெளியான முக்கிய அறிக்கை

2025-04-18 4 Dailymotion

நடிகர் ஸ்ரீ தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்று லோகேஷ் கனகராஜிடம் இருந்து அறிக்கை ஒன்று வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் ஶ்ரீ. வழக்கு எண் 18ன் கீழ் 9, மாநகரம், இறுகப்பற்று என அவர் நடித்த படங்களில் எல்லாம் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

கடந்த சில மாதங்களாகவே திரைத்துறை பக்கம் தலைகாட்டாத ஸ்ரீயின் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார் ஸ்ரீ. அவர் எங்கே இருக்கிறார் என்று குடும்பத்தினரே தேடும் நிலை தான் இருந்தது. நன்றாக இருந்த நடிகர் இப்படி ஆகிவிட்டாரே என பலரும் அவர் இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தனர். மேலும் அவரது மனநிலை தொடர்பாகவும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் அவரது நண்பர்கள் கொடுத்த பேட்டியில் மற்ற நடிகர்களால் ஸ்ரீயின் வாழ்க்கை போய்விட்டதாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீயின் நிலைமை தொடர்பாக அவரது குடும்பத்தினரே விளக்கம் கொடுத்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஸ்ரீ தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி சில நாட்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த மாட்டார். அவர் நல்ல நிலைமைக்கு திரும்புவதை கருத்தில் கொண்டு அனைவரும் அவரது தனியுரிமையை மதிக்க வேண்டும். பொய்யான தகவல்கள் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. அவரது உடல்நிலை தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ தொடர்பாக தவறாக போடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் பேட்டியில் சொல்லும் கருத்துகளை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ நடித்த மாநகரம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்தநிலையில் ஸ்ரீயின் நலனுக்காக லோகேஷ் கனகராஜ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.