திருகோணமலை - கந்தளாய் அக்பர் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (4) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பேருந்துஒன்றும், திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.