அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகமும் சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி, பாஜக தலைவர் மாற்றும் மற்றும் வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பக பேசியதாக சொல்லப்படுகிறது.