அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டம் நெதஸ்டல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் லயன் குடியிருப்பில் ஒரு வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்தனர் .
இன்று (20) காலை 6:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இந்த தீ விபத்தின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்