ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த தான் முயற்சித்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். தனது கோரிக்கையை ஏற்பதற்கு டிராவிட் தயாராக இல்லை எனக் கூறிய அவர், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் விலகுவது தனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றார். ராகுல் டிராவிட்டின் பதவி காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைய உள்ளது.