¡Sorpréndeme!

யாழில் வெளிநாட்டு பெண்ணிடம் கைவரிசை காட்டிய சகோதரர்கள்: வெளியாகிய சிசிரிவி காணொளி

2024-01-29 11,098 Dailymotion

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை
திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு
கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

திருநெல்வேலி சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டு பெண்ணின்
கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் , 500 யூரோ , 20,000 ரூபாய் அடங்கிய
கைப்பையே கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவரால் நூதனமான முறையில்
அபகரிக்கப்பட்டது.