மட்டக்களப்பு பண்ணையாளர்கள் கால்நடைகள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வரும் நிலையில், பண்ணையாளர்கள் பெரும் துன்மங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்களின் ஜீவனோபாயமாக கால்நடை வளர்ப்பு காணப்படுவதாகவும், இந்த அவலநிலை தொடர்வதால் வாழ்வாதாரம் படிப்புக்குள்ளாவதாகவும் கூறியுள்ளனர்.
கால்நடைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அதற்கு பொறுப்பு கூறவேண்டிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.