மத்திய ஆப்ரிக்க தேசமான ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, அது குறித்தான அவசர ஆலோசனைக்காக ஐநாவின் உலக சுகாதார அமைப்பு கூடி விவாதிக்கிறது.
கடந்தாண்டும் இதே போல ஆப்ரிக்க தேசமான கானாவில் மார்பர்க் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. பரவலின் தொடக்கத்திலே அடையாளம் காணப்பட்டதாலும், உலக சுகாதார அமைப்பு உடனடி நடவடிக்கை மேற்கொண்டதிலும் குறைந்த உயிர்ப்பலிகளோடு பாதிப்பிலிருந்து கானா மீண்டது. இப்போது ஈகுவேடோரியல் கினியாவில் கண்டறியப்பட்டிருக்கும் மார்பர்க் வைரஸ் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கிறது. மேலும் தொற்றுக்கு ஆளான 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாமதமாக கண்டறியப்பட்ட பரவல், அவசியமான தடுப்பு நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடி விவாதிக்கிறது.
#காமதேனு
#kamadenu
#Kamadenutamil
#காமதேனுதமிழ்
Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/