¡Sorpréndeme!

நுங்கு வண்டியை வைத்து உடற்பயிற்சி செய்து பார்வையாளர்களை கவர்ந்த சிறுவன்!

2022-06-13 4 Dailymotion

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடியில் நடைபெற்ற பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயத்தில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டனர். எட்டு வயதுக்கு மேற்பட்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு நடத்தப்பட்ட இந்த நுங்கு வண்டி பந்தயத்தில் 20க்கு மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, நுங்கு வண்டி பந்தயத்தை காண வந்த 3 வயது சிறுவன் அங்கிருந்த ஒரு நுங்கு வண்டியை எடுத்து உடற்பயிற்சி செய்து தன் பலத்தை சோதித்து கொண்டான். சிறுவன் உடற்பயிற்சி செய்வதை ஏராளமானோர் கண்டு ரசித்த நிலையில், தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.