¡Sorpréndeme!

பொதுமக்கள், அதிகாரிகள் ஷாக்; சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள்!

2022-06-01 1 Dailymotion

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கண்ணகி நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வட்ட வழங்கல் ஆய்வாளர் தலைமையில் திடீரென கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணகி நகர் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையின் அருகே, சாலையில் 17 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 1 டன் எடை கொண்ட ரேசன் அரிசி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.