¡Sorpréndeme!

பைக் தானாக ஓடும் திக்... திக். காட்சிகள்!

2022-04-02 1 Dailymotion

கோவை குறிச்சி பகுதியின் ஒரு வழிப்பாதையில் கல்லூரி மாணவர் இரு சக்கரத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தின் போது மாணவன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும், இரு சக்கர வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாக சென்றது. அந்த வாகனம் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சிறுது தூரம் சென்று கிழே விழுந்தது.