சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடி சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு மாணவன் தாக்க முயன்றுள்ளார். மாணவனுக்கு பயந்து அலுவலக கதவை பூட்டி தலைமை ஆசிரியர் தப்பித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.