காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 17 பெண்கள் மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேருக்கு மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது இந்நிலையில் காஞ்சிபுரம்
தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள யுவராஜின் மனைவி மகாலட்சுமி திமுகவின் மேயர் வேட்பாளராக தலைமை கழகம் அறிவித்துள்ளது மேற்படி மகாலட்சுமி இன்போசிஸ் மென் பொறியாளர் ஆக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் அரசியலில் இறங்கி மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தன் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து தன் பதவியை விட்டு வெளியேறி தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்