மா.சுப்பிரமணியன் பேட்டி
டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது சென்னை மதுரை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 2 பேர் தற்போது நலமாக இருக்கிறார்கள் ஒருவர் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் அவருடைய பரிசோதனை முடிவில் டெல்டா பிளஸ் இருப்பது உறுதியாகி இருக்கிறது.சமூக வலைதளத்தில் சிறுமி ஒருவருக்கு மருத்துவ தேவைக்காக 16 கோடி தேவைப்படுகிறது நன்கொடை தேவை போன்ற தகவல் பரப்பட்ட வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதி ஆக மாற்றப்படும் என தெரிவித்தார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம் கரும்பூஞ்சையால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு குறைவதால் கரும்பூஞ்சையும் குறையும் 7000 படுக்கை வசதியுடன் கரும்பூஞ்சைக்கு தமிழ்நாடு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
ma subramanian Pressmeet
#MASubramanian
#Mithra
#DeltaPlusVirus