¡Sorpréndeme!

உஷார் மக்களே! திருமணத்துக்காக பெண் தேடும் குடும்பத்தினரைக் குறிவைத்து இயங்கும் கும்பல்!

2020-11-06 6 Dailymotion

Reporter - தினேஷ் ராமையா
மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் மூன்று ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய 27 வயது பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் சின்னார் (Sinnar) பகுதியைச் சேர்ந்த யோகேஷ் சிர்ஷாத் என்பவருக்குப் பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்காததால், `வரன் தேவை’ என்று அவரது பெற்றோர் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதன்மூலம் அறிமுகமான விஜயா அம்ருதே என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஷிர்ஷாத்துக்குத் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் முடிந்து 15 நாள்களுக்குப் பின்னர் நகை, பணத்துக்குடன் விஜயா மாயமாகியிருக்கிறார். அவரைப் பல இடங்களில் ஷிர்ஷாத் தேடியும் கிடைக்கவில்லை. விஜயா குறித்து விசாரித்த ஷிர்ஷாத்துக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.