¡Sorpréndeme!

ஒரே நாளில் கோடீஸ்வரரான 24 வயது இளைஞர்! அடிச்சது jackpot! #lottery

2020-11-06 6 Dailymotion

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையை செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான கேரள ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் குலுக்கல் நடந்தது.

இதன் வெற்றியாளர் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.12 கோடிக்கான முதல் பரிசை இடுக்கியை சேர்ந்த 24 வயது இளைஞர் அனந்து விஜயன் பெற்றுள்ளார். விஜயனின் பூர்வீகம் இடுக்கியில் உள்ள கட்டப்பனா அருகே தோவாலா என்ற ஊர் ஆகும். இவரின் தந்தை விஜயன் ஒரு ஓவியர். மூத்த சகோதரி ஆதிரா, முதுகலை பட்டப்படிப்பு படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்தார்.