¡Sorpréndeme!

எங்க அக்காதான் எனக்கு சாமி...' - கதறும் விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயின் தங்கை!

2020-11-06 997 Dailymotion

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக, அ.தி.முக-வைச் சேர்ந்த முருகன், யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய சிறுமியின் கொலைக்குப் பின்னரும் கிராமத்தில் நிலைமை சீரடையவில்லை எனக் கலங்குகின்றனர் சிறுமியின் பெற்றோர். அதிலும், ஜெயஸ்ரீயின் தங்கை, அக்காவின் இறப்பில் இருந்து மீள முடியாமல் கதறுகிறார். | #Viluppuram

Reporter - ஜெ.முருகன், வீடியோ: டி.சிலம்பரசன்