தி அண்டர்டேக்கர்', மூன்று தலைமுறைளை ஈர்த்த தலைவன். ப்ரோ ரெஸ்லிங் உலகின் தன்னிகரில்லா சமரன். இந்த பெருமைகளை அடைய, அவர் சிந்திய ரத்தம் ஏராளம், உடலுக்குள் உடைந்து நொறுங்கிய எலும்புகள் ஏராளம். அண்டர்டேக்கர் நின்றால் களம் இன்னும் கம்பீரமாகும். அந்த மணிசத்தம் கேட்டால், அரங்கமே ஆவிகளின் கூடாரமாகும். சில்லிட வைக்கும் பார்வை, கண்களை ஏமாற்றும் வேகம், இருளில் வெட்டிய மின்னல் என 36 ஆண்டுகள் களத்தில் கண்கட்டு வித்தைக் காட்டியவர் தனது ஒய்வை அறிவித்துவிட்டார்.
#Undertaker #UndertakerRetires #WWE #WWF #Wrestlemania
Reporter - Suryaraj