¡Sorpréndeme!

சீரியலோ சினிமாவோ... தொலைக்காட்சியின் பிக் பாஸ் டீ.ஆர்.பி தான்! #HowTRPworks

2020-11-06 0 Dailymotion

பத்து வருடங்களுக்கு முன் வந்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று. ”சச்சின் ஒரு நிமிடத்தில் ரூ.1,163 சம்பாதிக்கிறார். ஷாருக்கான் ஒரு நிமிடத்தில் ரூ.1,430 சம்பாதிக்கிறார். இந்திரா நூயி ஒரு நிமிடத்தில் ரூ.2,911 சம்பாதிக்கிறார். எனவே பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்” என்று சொல்கிற விழிப்புஉணர்வு விளம்பரம் அது. இன்னொரு விளம்பரம் “ உங்களின் 24 மணி நேரத்தில் நாங்கள் வெறும் 2 நிமிடங்களை மட்டுமே கேட்கிறோம்” என முடிகிற நூடுல்ஸ் விளம்பரம். மேலே சொல்லப்பட்டிருக்கிற நிமிடத்திற்கும், விளம்பரத்திற்கும், ஏன் நமக்கும் கூட ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கிறது. அந்தத் தொடர்பின் பெயர் “டிஆர்பி” (TRP) TELEVISION RATING POINT.

Reporter- George Antony