``என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டுப் போறாங்க..!" எனத் தனக்கே உரித்தான வெள்ளந்தி சிரிப்பு சிரிக்கிறார் தையல் நாயகி. பட்டுக்கோட்டையில் டிபன் கடை நடத்தி வரும் திருநங்கை.