ஹேக்கிங் போன்ற சில செயல்கள் மூலமாகத் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பணம், டேட்டா எனப் பல விஷயங்கள் திருடப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் மிரட்டியும்கூட சிலர் பணம் பறிப்பதுண்டு. ஆனால், இவை எதுவுமே இல்லாமல், பெரிதாக மெனக்கெடாமல் பல கோடி ரூபாயைச் சுருட்டியிருக்கிறார் ஒரு நபர். அவர் கை வைத்தது தொழில்நுட்ப உலகில் ஜாம்பவான்களாக இருக்கும் கூகுள், ஃபேஸ்புக் என்ற இரண்டு நிறுவனங்களிடம் என்பதுதான் இங்கே ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்.