சென்னையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் குறைந்தபட்சம் இரண்டு டெலிவரி பாய்களைப் பார்க்க முடியும். இவர்களுக்கு இந்தப் பணியில் அப்படி என்ன சம்பளம் கிடைக்கும்; அலைச்சலான வேலை.டிராஃபிக், மழை, வெயில், பசி நேரம் எதுவாக இருந்தாலும் நமக்குக் கவலையில்லை.கொஞ்சம் நேரம் தாமதமானாலும் அவர்களைக் கரைத்து கொட்டிவிடுவோம்.இவ்வளவு சிரமங்கள் நிறைந்த வேலையில் அப்படி என்ன சம்பாதித்துவிடுவார்கள்.