தர்மதுரை' படம் இந்த சமூகத்துல எனக்கான ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு எத்தனையோ இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைஞ்சிருக்கேன். அப்போ ஒருத்தர் 'நீ என்ன நயன்தாராவா. பெரிய ஸ்டாருன்னு மனசுல நினைப்பா'ன்னு கேட்டுக் கிண்டல் பண்ணினாரு. அப்போ முடிவு பண்ணினேன் நாம நயன்தாரா மேடம்கூட ஒரு படத்துலயாவது சேர்ந்து நடிச்சிடணும்னு. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு அந்தக் கனவு நிறைவேறியிருக்கு” என்றார் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம் பூரிப்புடன்.