இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களைக் கடந்த ‘ரன் மெஷின்’, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என விராட் கோலி எடுக்கும் ஒவ்வொரு ரன்னிலும் எதோ ஒரு சாதனை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்.