சென்னை வேளச்சேரி, சீத்தாராம் நகரில் தனியாகக் கல்லூரி மாணவி நடந்து சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் இருவர் வந்தனர். அவர்கள், மாணவியிடமிருந்த செல்போனைப் பறிக்க முயன்றனர். அப்போது, மாணவி, `திருடன் திருடன், காப்பாற்றுங்கள்' என்று சத்தமிட்டார். பதற்றத்தில் கொள்ளையன் கையில் செல்போன் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் சென்ற பைக் கொள்ளையர்கள், திரும்ப அதே இடத்துக்கு வந்து மாணவியிடம் செயினைப் பறிக்க முயன்றனர். அப்போது அவ்வழியாகக் காரில் வந்தவர்கள், இந்தச் சம்பவத்தைப் பார்த்தனர். அவர்கள், காரிலிருந்து இறங்கி கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர்.
chennai bike borne robbers tried to snatch chain from student