“எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் இறைவணக்கப் பாடலைப் பாடுவாங்க. அப்படித்தான் ஒருநாள் அவளும் பாடினாள். 'நீராருங் கடலுடுத்த' பாடலை அந்தக் குரலில் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. அன்னிக்கு முழுக்க என் செவிகளில் அந்தக் குரல் மட்டுமே ஒலிச்சுட்டு இருந்துச்சு.நெகிழ்ச்சியான குரலில் சொல்கிறார் மாலதி. 'VIJAY TV SUPER SINGER JUNIOR 5' பட்டத்தை வென்ற Prithika வின் தலைமையாசிரியர்.