தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் சரியில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தனது கடமையை உணர்ந்து சரியாகச் செயல்படவில்லை. அ.தி.மு.க ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்த ஆட்சியாக உள்ளது. பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஆட்களை நியமித்ததில்கூட ஊழல் நடந்திருக்கிறது. எல்லாத் துறைகளிலுமே அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. அதனால் மக்கள் இந்த ஊழல் ஆட்சியை விரைவில் புறக்கணிப்பார்கள்.