12 வயதாகும் ராஜ்கௌரி வடக்கு இங்கிலாந்தில் உள்ள செஷயரில் வசிக்கிறார். இந்த ஐக்யூ டெஸ்டில் அதிகபட்ச மதிப்பெண்களாக 160 இருந்தது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இதுபோன்ற சோதனையில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரின் ஐக்யூ 160 மதிப்பெண்கள் எனக் கணக்கிட்டிருந்தார்கள். இந்தச் சாதனையை யாருமே எட்டாத நிலையில், பேராசிரியர் ஸ்டிபன் ஹாப்கிங் பெற்ற 160 என்கிற மதிப்பெண்ணை கடந்து 162 வாங்கியுள்ளார் ராஜ்கௌரி. உலகில் உள்ள மக்கள்தொகையில் சில ஆயிரம் பேர் மட்டுமே மென்சாவின் டாப் லெவல் என்று சொல்லக்கூடிய 140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 'ஜீனியஸ்' தகுதியை அடைந்துள்ளனர்.