அ.தி.மு.கவின் இரண்டு அணிகளின் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த நேரத்தில் தினகரன் தரப்பு சென்னையில் இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் டெல்லி காவல்துறையின் விசாரணை வளையத்தில் இருந்தே தினகரன் மீண்டு வருவது கடினம் என்ற தகவலும் உலவுகிறது. இந்த வழக்கில் தினகரன் கைதாவது உறுதி என்கிறார்கள். மொத்தத்தில் டெல்லி சென்றுள்ள தினகரன் சென்னை திரும்புவது கடினம் தான்.