¡Sorpréndeme!

குற்றவாளியாக தினகரன் மாறியது எப்படி? டி.டி.வி. தினகரனின் அப்டேட்!

2020-11-06 0 Dailymotion

சசிகலா மீது தமிழக மக்களும், அ.தி.மு.க-வில் ஒருதரப்பினரும் கொண்டிருந்த வெறுப்பு, தினகரனின் திடீர் நியமனத்தால் மேலும் அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதா இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்ததால், அ.தி.மு.க அம்மா அணி என்று தினகரன் அணிக்கும், அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் செயல்பட்டு வருகிறது.