ஐஞ்சு வயசு வரைக்கும் கலைச்செல்வனுக்கு பேச்சுவராம இருந்துச்சு. மேலூர் கவர்மென்ட் ஸ்கூல்ல பத்தாவது வரைக்கும் படிச்சவன், பதினொன்னாவதை திருப்பத்தூர்ல படிச்சான். பத்துநாள்தான் படிச்சான். அப்புறம் அங்கிருந்து எங்க போனானு தெரியல். நாங்க தேடாத எடமே இல்ல. மனசும் உடம்பும் வலிக்கவலிக்கத் தேடினோம்.