டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இவர் கல்லூரியில் நடந்த பல்வேறு தலித் சார்ந்தப் போராட்டங்களில் கலந்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.