“சசிகலாவுக்கு எதிரான நிலையை பன்னீர்செல்வம் எடுத்த நேரத்திலேயே, 50 எம்.எல்.ஏ-க்கள் வரையில் அவர் பின்னால் வருவார்கள் என எதிர்பார்த்தோம். கூவத்தூரில் அவர்கள் அடைக்கப்பட்டபோதும் 12 எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வம் பக்கம் வந்தனர். ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி கிடைத்திருந்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும். எடப்பாடியால் முதலமைச்சராகி இருக்க முடியாது. சசிகலா உறவுகள் போட்ட திட்டமும் முடிவுக்கு வந்திருக்கும். இதை உணர்ந்துதான் வெகு சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்திவிட்டார் சசிகலா. ஆட்சியைத் தக்க வைத்தாலும், எம்.எல்.ஏ-க்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்துவருகின்றனர். கூவத்தூரில் வைத்து அவர்களுக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும், அவர்களில் பலர் பன்னீர்செல்வத்தின் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். இதை அறிந்து அவர்களுடன் பேசி வருகிறார் கே.பி.முனுசாமி. இந்தப் பேச்சின் முக்கிய சாராம்சமே, ‘கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு பன்னீர்செல்வத்தை முன்னிறுத்த வேண்டும்’ என்பதுதான். இதுகுறித்து பன்னீர்செல்வம் அணியின் முக்கிய பிரமுகரிடம் பேசிய தென்மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர்,