¡Sorpréndeme!

போதும் இத்தோட நிறுத்திக்குவோம் : வைகோ

2020-11-06 1 Dailymotion

சமூக வலைத்தளங்களில் தன்னை கலாய்ப்பதற்கு பதிலாக, ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் சுமேஷ் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ, அண்ணாவால் உருவாக்கப்பட்ட அறிவு இயக்கமான திமுக, தற்போது அழிவு பாதைக்கு சென்று கொண்டு இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். திமுக தற்போது ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த தொகுதிகளுக்குச் செல்லும் போது, மக்களை தூண்டிவிட்டு திமுக குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.