"ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில், வேட்பு மனுத்தாக்கலின்போது அளிக்கப்படும் பி ஃபார்மில், பொதுச்செயலாளர் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு இடம்பெற்றிருந்தது. இதைப் பற்றி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோதும், 'அவரால் கையெழுத்துப் போட இயலவில்லை' என்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் கைநாட்டுக்கு ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுத் தந்தவர்களைத்தான், தற்போது கார்டனில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் மூலம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளவைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளனர். இதை அறிந்து, குடியரசுத் தலைவர் உள்பட அனைத்து தரப்பினரையும் பன்னீர்செல்வம் அணியினர் சந்திக்கச் செல்கின்றனர். 'கார்டனில் உள்ளவர்களை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவை வைத்துக்கொண்டே அனைத்து ஏமாற்று வேலைகளையும் செய்தவர்கள்தான் இவர்கள்.