#Sponsoredcontent
திறைமைகளும் வலிமையும் உள்ளே உறங்கிக் கிடக்க, வாய்ப்புகள் கிடைக்காமல், மூலையில் முடங்கிக் கிடக்கும் கனவுகள் எத்தனையோ!
நாம் பெண்ணியம் பேசும் இந்தக் காலத்தில்தான், கிராமப்புற பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல், தங்களுடைய நோக்கம் இன்னது என அறியாமல், வெதும்பி, விழி பிதுங்கி பொருளாதார சுதந்திரம் இன்றி காலம் தள்ளி வருகின்றனர். கணவன், குழந்தைகள், வீடு, சமையல் - இதுதானா இவர்களின் வாழ்க்கை? இந்தச் சின்னக் கூட்டுக்குள் சிக்கிச் சிதறவா இவர்கள் படைக்கப்பட்டனர்? போதும், இனியும் உறங்கிப் பயனில்லை, இது இறங்கி அடிக்கவேண்டிய நேரம்!
பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில்தான் அடங்கியுள்ளது அவர்களின் புதிய பாதை... இதையுணர்ந்து, நிப்பான் பெயின்ட்ஸ் நிறுவனம் 'Nசக்தி' என்கிற தனது புதிய முயற்சியின் மூலம் கிராமப்புற பெண்களுக்கான பெயின்டிங் பயிற்சி, வியாபாரத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்பை வழங்கிவருகிறது.
சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமப்புற பகுதிகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதன்மூலம் தொழில் முனைவோராக மாறியுள்ளனர். இந்த முயற்சியின் மூலம், உலகம் அறியாத மிரட்சி விழிகள் இன்று இச்சமுதாயத்தை தைரியமாக பார்க்கின்றன, பூமிபார்த்த தலையோ, சிரம் நிமிர்ந்து பெருமைகொள்கிறது, கரண்டி பிடித்த கைகள் இன்று தூரிகைப் பிடித்து, பெண்ணின் சக்தியை வண்ணங்களால் தீட்டிக் கொண்டிருக்கின்றன!
"மாற்றந் தருவது 'என் சக்தி',
மானங் காப்பது 'என் சக்தி',
மானுடம் காணட்டும் 'என் சக்தி'",
என பூமி அதிர உரக்கச் சொல் பெண்ணே!
நிப்பான் பெயின்ட் 'Nசக்தி' - இது உன் சக்தி!