¡Sorpréndeme!

9 மீனவர்கள்.. 55 நாள்கள் போராட்டம்.. கடலுக்குள் என்ன நடந்தது? #survival

2020-11-06 0 Dailymotion

MEENAKSHI INSTITUTE OF CATERING & HOTEL MANAGEMENT, VALASARAVAKKAM, CHENNAI
https://mgrihmct.edu.in/
Reporter - ஜெனிஃபர்.ம.ஆ
Camera - க.பாலாஜி
மீன்வேட்டைக்காகக் கடல் செல்லும் மீனவர்களின் உயிர், வீடு திரும்பும்வரை நிச்சயமில்லாதது. இந்தத் துயர உண்மையின் இன்னொரு சாட்சியம் சென்னை எண்ணூர்ப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள். கடலுக்குள் நிராதரவாக 55 நாள்கள் போராடி பாதி உயிரோடு, கடந்த மாதம் மியான்மரில் கரை சேர்ந்திருக்கிறார்கள். கொரோனாக் கட்டுப்பாடுகளையெல்லாம் சந்தித்து முடித்து, இரு நாட்டு அதிகாரிகளின் துணையோடு கடந்த வாரம் எட்டுப் பேர் மட்டும் வீடு திரும்பியிருக்கிறார்கள். கடலுக்குள் என்ன நடந்தது, வீடு திரும்பாத இன்னொருவர் எங்கே, அரசாங்கம் என்ன செய்தது எனப் பல கேள்விகளோடு அவர்களைச் சந்தித்தேன்.
சிலர் தயங்க, சிலர் தவிர்க்க, சிலர் மட்டும், 55 நாள் நடுக்கடல் வாழ்க்கையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் மதுரையிலிருந்து பிழைப்புதேடி வந்து, சென்னையில் கடலோரத்தில் குடியேறி டெய்லராகப் பணியாற்றிவந்த முருகன் அனைவரின் சார்பாகவும் நம்மிடம் பேசினார்.