¡Sorpréndeme!

‘‘என் நெஞ்சைக் கிழிச்சுப் பாருங்க சார். உள்ள வாத்தியார் இருப்பார்’’/Life history of M G Ramachandran

2020-11-06 8,879 Dailymotion

#MGR #Puratchithalaivar #mgramachandran


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் -

என்று ‘தெய்வத்தாய்' படத்தில் பாடிய எம்.ஜி.ஆர் தனது மூச்சை நிறுத்திய பிறகும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்கள் நம்நாட்டில் உண்டு.

‘‘அந்த மகராசனுக்கு சாவு இல்லை’’ என்று கும்பிடும் மக்கள் நாட்டில் உண்டு. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது அதுபற்றி செய்தியாக்க வந்த அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் ஒரு கூலித் தொழிலாளி சொன்னார்: ‘‘என் நெஞ்சைக் கிழிச்சுப் பாருங்க சார். உள்ள வாத்தியார் இருப்பார்’’ என்று. கிராமத்துப் பெண்களில் சிலர், எம்.ஜி.ஆர் படத்து சுவரொட்டிகளை விரித்துப் படுத்துக்கொள்வதாக அந்தப் பத்திரிகையாளரே எழுதினார். எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் எந்த முகமும் அந்த ஈர்ப்பை அடைந்தது இல்லை. சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்து குழைத்த தேகத்தால் மக்களை மயக்கி வைத்திருந்தார் மெனகத் கோபால மேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.!