தஞ்சாவூரில் மகப்பேறு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 8 திருநங்கைகளை பணிக்கு அமர்த்தி அசத்தியிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. தமிழகத்தில் இதுவே முதன்முறை என பெருமிதம் கொள்ளும் அளவுக்கு பணியில் சேர்ந்திருக்கும் திருநங்கைகள் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான தகவல்களையும், குழந்தைக் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையிலும் பண்போடும் பாசத்தோடும் பணியைத் தொடங்கியிருக்கிற அவர்கள், `இனி எங்களுக்கு நல்ல காலம்தான் நாங்களும் இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்வோம்' என நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.