இரு அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த அணு உலைக்கு பலகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறை, கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.