¡Sorpréndeme!

காணாமல்போன பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்பு! #viral video

2020-11-06 0 Dailymotion

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கொலம்பியா பெண் ஒருவர் சனிக்கிழமை கடலில் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டில் வசித்து வந்த ஏஞ்சலிகா கெய்டன் என்ற பெண்மனி தனது கணவரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து கெய்டனின் குடும்பத்தினர் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவரை தேடி வந்துள்ளனர். ஆனால அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எஞ்சலிகா கெய்டா கொலம்பியா கடலில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் புவேர்ட்டோ கொலம்பியாவின் கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.