¡Sorpréndeme!

பாரம்பரிய ஜோதிடம் Jothida Rathna Dr.V.Govindarajan

2020-01-04 8 Dailymotion

பாரம்பரிய ஜோதிடம் Jothida Rathna Dr.V.Govindarajan
பாரம்பரிய ஜோதிடம் உலகில் சூரியனை மையமாக வைத்து கணிக்கப்படுவது பாரம்பரிய ஜோதிடம் ஆகும்.பாரம்பரிய ஜோதிடம் ஆனது 27 நட்சத்திரம் 12 ராசி 9 கிரகங்களைக் கொண்ட பாவச் சக்கர மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்கள் கிரகங்களைச் சலனப்படுத்தும். கிரகங்கள் சந்திரன் என்ற மனோ காரகன் மூலமாக மனிதர்களைச் சலனப்படுத்தும். அதனால் ஸ்வாச கதி மாற்றமடைந்து பஞ்சபூதத்தைச் சலனப்படுத்தும். இதனால் 96 தத்துவங்கள் பேதித்துக் கர்மவினை ஏற்படும்.அது சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் என்று மூன்று வகைப்படும். சஞ்சிதம், பாவக் கொடுப்பினை என்ற விதி ஆகும். பிராரப்தம், திசா கொடுப்பினை என்ற மதி ஆகும். ஆகாமியம், கோள் சாரம் என்ற கதி ஆகும். இதன் அடிப்படையில் இந்த ஸ்வாசங்கள் ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சூரிய நாடி சந்திர நாடி என்று மாறியும் அதில் ஒவ்வொன்றிலும் 5 பூதங்களும் இயங்கும்.இவ்வமைப்பு ஒரு நாளில் 360 டிகிரி என்ற வட்டச் சுற்று முறையில் 21600 சுவாசமாக இயங்கும். இந்த அடிப்படையை வைத்தே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு ராசியாகவும் மற்ற 5 கிரகங்களுக்கும் இரண்டிரண்டு ராசிகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இது சூரியனில் இருந்து 5 கோள்களாகவும் சந்திரனிலிருந்து 5 கோள்களாகவும் இருப்பதை ராசிக் கட்டத்திலும் பிரபஞ்சக் கோள் அமைப்பிலும் பார்க்கலாம்.



We offer free video with a variety of video marketing strategies to help you take your career path.