அரக்கன் கம்சன் தனது தங்கை தேவகிக்கு பிறக்கும் 8வது குழந்தையால் கொல்லப்படுவார் என தெரிஞ்சுகிட்டான் இதனால் தங்கை தேவகியையும் - வசுதேவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்று தனக்கு பகைவர்கள் இருக்கக் கூடாது என நினைத்தான்.
யாருக்கும் தெரியாமல் 7வது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் இருந்த போது விஷ்ணு பகவான் மாயா தேவியை அழைத்து, தேவகி வயிற்றில் இருக்கும் பலராமன் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்தகோபரின் மனைவியர்களில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்ய சொன்னார்.
மேலும் மாயதேவியை யசோதாவின் வயிற்றுக்குள் கருவாக வேண்டும் என சொன்னார். அதன்படியே இரண்டையும் மாயாதேவியும் செய்தார். .இறுதியில் தேவகிக்கு 8 வது குழந்தையாக கிருஷ்ணன் கருவாக உருவாகினார் .
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் 8வது குழந்தையாகக் கிருஷ்ணர் பிறந்ததை தேவகியும், வசுதேவரும் கொண்டாடினர். கிருஷ்ணர் பிறந்ததை மூவர் மட்டும் தான் முதலில் பார்த்தனர். வசுதேவர், தேவகி மற்றும் சந்திரன்.
இதன் காரணத்தால், கோகுலாஷ்டமி தினத்தன்று சந்திர வழிபாடு செய்வதும் வழக்கமாகப் பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு கிருஷ்ணனை யசோதாவிடம் யாருக்கும் தெரியாமல் சேர்ப்பித்து, யசோதா பெற்ற பெண் குழ்ந்தையான மாயாதேவியை தங்கள் குழந்தை என அரக்கன் கம்சனிடம் சொன்ன கதையும் நிகழ்ந்தது