மதுரை மாநகர் C4 திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா என்பவர் மதுரை மாநகரில் கஞ்சா தொழிலை தொடர்ந்து செய்து வந்த இப்ராஹிம்ஷா என்பவருக்கு இன்றைய இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி என்னென்ன குற்றச்சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை விளக்கினார். இப்ராஹிம்ஷா கஞ்சா தொழில் செய்வதை விட்டுவிடுவதாக காவல் ஆய்வாளரிடம் தெரிவித்ததால் உடனே ஆய்வாளர் இப்ராஹிம்ஷாவுக்கு தனது சொந்த செலவில் சைக்கிள் மற்றும் ஒரு மூடை உப்பு வாங்கிகொடுத்து உப்பு வியாபாரம் செய்ய உதவி புரிந்தார்.
des : Police Commissioner helps kanja sales man.